ஹோம் எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் இந்திர குமார்: நல்ல காற்று, நல்ல உணவு, நல்ல தண்ணீர் இந்த மூன்றும் தான் மனிதனுக்கு முக்கியம். இவற்றை நம் வீட்டிலேயே செய்யலாம். ஒரு தொட்டி அமைத்து, மழை நீரைச் சேமிக்கலாம். மிகக் குறைந்த பரப் புள்ள மொட்டை மாடியில், ஆறாயிரம் லிட் டர் மழை நீரைச் சேமிக்கலாம். வெட்டிவேரைத் தண்ணீர் உள்ள தொட் டிக்குள் போட்டு வைத் தால், எல்லா அசுத்தங் களும் அடங்கி, நீர் தெளிந்து விடும். அதைச் செப்புப் பாத் திரத்தில் எடுத்து, தேற் றான் கொட்டைகளைப் போட்டால் குடிநீர் தயார். யுரேனியத் தையே சமநிலைப் படுத்தும் தன்மை உள்ள தேற்றான் கொட்டைகள், நம் ஊரில் சாதாரணமாகக் கிடைக்கின்றன. இது எல்லாம் இடவசதி குறைவான நகரத்து வீடுகளுக்குத்தான். இதுவே கிராமம் என்றால், ஒரு கிணறு வெட்டி மொத்த மழைநீரையும் அதற்குள் விடலாம். அதை செப் புப் பாத்திரத்தில் எடுத்து வைத்து குடிக் கவும், சமைக்கவும் பயன்படுத்தலாம். மொட்டைமாடித் தோட்டம் என்றதும், எல்லாரும் யோசிப் பது தண்ணீர் பற்றிதான். ஐந்து பேர் கொண்ட குடும்பத் தில், சமையல் அறையில் மட்டும், நாள்தோறும் 30 முதல் 40 லிட் டர் தண்ணீர் வீணாகிறது. இதை முறையாக பயன்படுத்தினா...