ஹோம் எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் இந்திர குமார்: நல்ல காற்று, நல்ல உணவு, நல்ல தண்ணீர் இந்த மூன்றும் தான் மனிதனுக்கு முக்கியம். இவற்றை நம் வீட்டிலேயே செய்யலாம். ஒரு தொட்டி அமைத்து, மழை நீரைச் சேமிக்கலாம். மிகக் குறைந்த பரப் புள்ள மொட்டை மாடியில், ஆறாயிரம் லிட் டர் மழை நீரைச் சேமிக்கலாம். வெட்டிவேரைத் தண்ணீர் உள்ள தொட் டிக்குள் போட்டு வைத் தால், எல்லா அசுத்தங் களும் அடங்கி, நீர் தெளிந்து விடும். அதைச் செப்புப் பாத் திரத்தில் எடுத்து, தேற் றான் கொட்டைகளைப் போட்டால் குடிநீர் தயார். யுரேனியத் தையே சமநிலைப் படுத்தும் தன்மை உள்ள தேற்றான் கொட்டைகள், நம் ஊரில் சாதாரணமாகக் கிடைக்கின்றன. இது எல்லாம் இடவசதி குறைவான நகரத்து வீடுகளுக்குத்தான். இதுவே கிராமம் என்றால், ஒரு கிணறு வெட்டி மொத்த மழைநீரையும் அதற்குள் விடலாம். அதை செப் புப் பாத்திரத்தில் எடுத்து வைத்து குடிக் கவும், சமைக்கவும் பயன்படுத்தலாம். மொட்டைமாடித் தோட்டம் என்றதும், எல்லாரும் யோசிப் பது தண்ணீர் பற்றிதான். ஐந்து பேர் கொண்ட குடும்பத் தில், சமையல் அறையில் மட்டும், நாள்தோறும் 30 முதல் 40 லிட் டர் தண்ணீர் வீணாகிறது. இதை முறையாக பயன்படுத்தினால், கழிவுநீரை மாடித் தோட்டத்துக்குப் பயன்படுத்தலாம். மாடியின் கைப்பிடிச் சுவரை ஒட்டியதுபோல ஒரு தொட்டி அமைத்து, அதற்குள் மண் பரப்பி எந்தச் செடியையும் வளர்க்கலாம். புதிதாக வீடு கட்டுபவர்கள் இதற் கான ஏற்பாட்டைச் செய்யலாம். இன்னும் எளிய வழி, பானையில் செடி வளர்ப்பது. இதன் மூலம் ஒரு குடும்பத்துக்குப் போதுமான காய்கறிகள் கிடைக்கும் வீட்டில் நாள்தோறும் உருவாகும் மக் கும் கழிவுகளை இரண்டு பூந்தொட்டிகளில் போட்டு வந்தால், அதுவே சிறந்த உரம். அதை ஒரு கைப்பிடி அளவு போட்டாலே, காய்கறிகள் செழித்து வளரும். குளியலறைக் கழிவுநீர் வெறியேறும் இடத் தில், கல்வாழை, சேப் பங்கிழங்கு செடிகளை வைத்தால், சோப்பு தண்ணீர் சுத்தமாகி விடும். இப்படி மறு சுழற்சி செய்தால், கழிவு நீர் என்பதே இருக்காது; கொசு இருக்காது. வீட்டில் எப்போதும் குளிர்ச்சி இருக்கும்.
Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News
Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News
Comments